குமரி அருகே விபத்து; போலீஸ் படுகாயம் 

குமரி அருகே விபத்து;  போலீஸ் படுகாயம் 
பைல் படம்
ஆரல்வாய்மொழி அருகே கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் மோதி போக்குவரத்து காவலர் படுகாயமடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனை தடுக்க ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலை அருகே செக் போஸ்ட் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு நாகர்கோவில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி என்பவர் நேற்று மாலையில் பணியில் இருந்தார். அவர் உணவு சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று சாப்பிட்டு விட்டு, பின்னர் அவர் செக் போஸ்ட்க்கு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, அந்த வழியாக கேரள மாநில சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக ராமமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டவர் பலத்த காயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து ராமமூர்த்தியின் மனைவி கீதா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story