விழுப்புரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் ஆய்வு

விழுப்புரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் ஆய்வு

போலீசார் ஆய்வு

புகார்கள் இருந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள், உற்பத்தி செய்யும் நெல்லை நேரடியாக எடுத்துச்சென்று விற்பனை செய்ய ஏதுவாகவும், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலும் ஆண்டு தோறும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு காரீப் பருவத்திற்கு நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. இதையொட்டி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 45 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் நிறுவனம் மூலம் 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஆக மொத்தம் 66 நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறதா என்றும், சரியான முறையில் எடை போடப்படுகிறதா, ஏதேனும் குளறுபடி நடக்கிறதா என்பது குறித்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காணையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகர் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் சரி யான முறையில் எடை போடப்பட்டு அவை அரசு நிர்ணயித்த விலைக்கே உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறதா, அந்நி லையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா? மூட்டைக்கு யாரே னும் பணம் வாங்குகிறார்களா, ஏதேனும் முறைகேடான செயல்கள் நடக்கிறதா என்றும் பார்வையிட்டனர். மேலும் ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு அங்கிருந்த விவசாயிகளிடம் போலீசார் அறிவுறுத்தினார்கள்.

Tags

Next Story