நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி செய்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு !
காவல்
பேருந்து நிலையத்தில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட பழனியை உரிய நேரத்தில் முதல் உதவி அளித்து காப்பாற்றிய தாராபுரம் உதவி ஆய்வாளர் கோபால் அவர்களுக்கு பொதுமக்களால் பாராட்டப்பட்டு அவர் காப்பாற்றிய வீடியோ தற்போது வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தாராபுரம் அரசு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நுழைவு வாயிலில் காத்திருந்த அடையாளம் தெரியாத நபர் நெஞ்சுவலி காரணமாக மயங்கி கீழே விழுந்தார் . அப்போது தாராபுரம் பேருந்து நிலைய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் கோபால் உடனடியாக முதல் உதவி செய்து .தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . முழுமையாக மயக்கம் தெளியாத நிலையில் அவர் பெயர் பழனி என்றும் சீர்காழி பேருந்துக்காக தாராபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்ததாக தெரிவித்தவர் . மருத்துவமனையில் சிகிச்சைக்காக இரண்டு நாட்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது . பேருந்து நிலையத்தில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட பழனியை உரிய நேரத்தில் முதல் உதவி அளித்து காப்பாற்றிய தாராபுரம் உதவி ஆய்வாளர் கோபால் அவர்களுக்கு பொதுமக்களால் பாராட்டப்பட்டு அவர் காப்பாற்றிய வீடியோ தற்போது வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது .
Next Story