விவேகானந்தர் மண்டபத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு

விவேகானந்தர் மண்டபத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு

குமரி வரும் மோடி

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இன்று டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் வந்தனர்.

அவர்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு தளத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விவேகானந்தர் மண்டபத்திலும் பிரதமர் தியானம் செய்யும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் மற்றும் அவர்களின் உடமைகளை போலீசார் மெட்டல் டிரெக்டர் மூலம் சோதனை செய்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகளின் அடையாள அட்டை, பெயர், முகவரி ஆகியவற்றை பதிவு செய்த பிறகே விவேகானந்தர் மண்டபத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்த போதிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். பிரதமர் வருகையையடுத்து நாளை முதல் 3 நாட்கள் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story