போதையில் டாக்டரை தாக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரணை
போதையில் டாக்டரை தாக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரணை
சிவகங்கையில் போதையில் டாக்டரை தாக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரணை.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் இன்று நடக்கும் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லுாரி நுழைவு வாயிலில் பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பில்லுாரை சேர்ந்த பாக்கியராஜ் போதையில் பேனரை கிழித்து அதனை அகற்ற முயன்ற போது கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டரை, பாக்கியராஜ் போதையில் தாக்கியுள்ளார் . இதுகுறித்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story