இளம்பெண் மாயம் காவல்துறையினர் விசாரணை

இளம்பெண் மாயம் காவல்துறையினர் விசாரணை

காவல்துறை விசாரணை


பென்னாகரம் அருகே நாகதாசன்பட்டியை சேர்ந்த இளம் பெண் மாயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகதாசன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் மகள் சந்தியா, இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று சந்தியா கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியா கிடைக்க வில்லை. இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாயமான சந்தியாவை தேடிவருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story