குழந்தையுடன் பெண் மாயம் -காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி மாவட்டம்,செங்குட்டை பகுதியில் மகனுடன் மாயமான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் அடுத்த செங்குட்டையைச் சேர்ந்தவர் மனோகரன் ஜோசியர். இவரது 2து மனைவி பிரியதர்ஷினி இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வீட்டில் இருந்த பிரியதர்ஷினி, கடந்த 23ம் தேதி குழந்தையுடன் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். பின்னர், நீண்ட நேரமாகியும், வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சியடைந்த மனோகரன், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story