விருத்தாசலம்: குழந்தையுடன் பெண் மாயம்
பெண் மாயம்
கடலூர் மாவட்டம்,விருதாச்சலம் அருகே குடும்ப தகராற்றால் மகனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் எம். ஆர். கே. , நகரை சேர்ந்த வைதேகி இவருக்கும் மங்கலம்பேட்டை அடுத்த கோ. பவழங்குடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. 8 வயதில் ரித்திக் ராஜ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையை கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி தனது மகனுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற வைதேகி வீடு திரும்பவில்லை. இது குறித்து வைதேகி தந்தை தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story