காவல்துறை நேர்மையாக செயல்பட வேண்டும்!

காவல்துறை நேர்மையாக செயல்பட வேண்டும்!

காவல்துறை நேர்மையாக செயல்பட வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஜெலஸ்டின் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.


காவல்துறை நேர்மையாக செயல்பட வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஜெலஸ்டின் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஜெலஸ்டின், பொதுசெயலாளர் அந்தோணி ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- சட்டத்தின் ஆட்சி நேர்மையாக அமைவதற்கு காவல்துறை திறமையாகவும், நேர்மையாகவும் பாரபட்சமின்றி செயல்படவேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து காவல் நிலையங்களிலும் கந்துவட்டி காரர்கள், கஞ்சா உட்பட போதை பொருட்கள் விற்போர் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் பட்டியல்கள் உள்ளன. ஆனாலும் சட்டவிரோத செயல்கள் காவல் நிலையங்களுக்கு தெரிந்து அவர்களின் ஆதரவுடனே நடைபெறுகிறது. இதன் உண்மை நிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் காவல்துறையினரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தினாலே உண்மைகள் வெளிவரும். அத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து ஒரே மாவட்டத்தில் விதிமுறைகளுக்கு எதிராக வேலை செய்து பலகோடிகள் வரை சொத்துக்கள் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் வாய்பேசாத பூச்சிகளாக காவல்துறைக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் தங்கும் விடுதிகள் முதல் பல இடங்களில் காவல்துறை உதவியுடன் பல தகாத செயல்கள் நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் நலன் கருதி காவல்துறையின் செயல்பாட்டை சீர்செய்து தமிழக மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story