கன்டெய்னர் லாரியை திருடி வந்த வந்த நபரை மடக்கி பிடித்த காவல்துறையினர்
கன்டெய்னர் லாரியை திருடி வந்த வந்த நபரை விருதுநகரில் மடக்கி பிடித்த காவல்துறையினர்
கோயம்புத்தூர் காந்திநகரை சார்ந்தவர் விஜய் வயது 25 இவர் மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நிறுத்தி வைத்திருந்த கன்டெய்னர் லாரியை அங்கிருந்து திருடி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த காவல்துறையினர் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியை பின் தொடர்ந்து அந்த நபரை விரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ஓட்டி வந்த கண்டெய்னர் லாரி விருதுநகர் அருகே சத்திர ரெட்டியாபட்டி சோதனை சாவடியில் நிற்காமல் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சோதனை சாவடியில் இருந்த காவல்துறையினர் பணியில் இருந்த நடமாடும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த காவல்துறையினர் விரட்டிச் சென்று கன்டெய்னர் லாரியை மடக்கி அதில் இருந்த விஜய் கைது செய்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை திருமங்கலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
Next Story