நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீசார் - துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு
ராணுவ வீரர்கள் அணிவகுப்பு
சுவாமிமலை காவல் சரக பகுதியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீசார் - துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு.
தஞ்சாவூரில் சுவாமிமலை காவல் சரக பகுதியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீசார் - துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு. தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும் உரிய பாதுகாப்புடன் நடத்தவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தியும், பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றார்கள். அதன்படி சுவாமிமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட தேவனாஞ்சேரி கிராமத்திலிருந்து நீலத்தநல்லூர் வரை கடைவீதிகளில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன் தலைமையில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, மற்றும் கும்பகோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் தேவ நாஞ்சேரிசேரி கிராமத்தில் இருந்து நீலத்தநல்லூர் வரை கடை வீதிகளில் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
Next Story