வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி !

வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி !

 போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி 

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றுவதற்காக ஒடிசாவில் இருந்து இரண்டு கம்பெனி துணை ராணுவ படையினர் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் ர் 450 பேர் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பங்கேற்றனர்.

பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் மாவட்ட காவல் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது, வடக்கு மாதவி அரசு ஆரம்பப்பள்ளி பகுதியில் துவங்கிய அணிவகுப்பு, கிராமத்தில் பல்வேறு தெருக்கல் வழியாக சென்று நிறைவாக பெருமாள் கோயிலில் நிறைவடைந்தது இத்துடன் காவல் துறையின் அதிநவீன பாதுகாப்பு வாகனங்களும் அணிவகுத்து வந்தது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story