ஓட்டுப்பெட்டி அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்

ஓட்டுப்பெட்டி அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்பு
கள்ளகுறிச்சி மாவட்டம், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்டிராங் ரூம்'களுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ராணுவ படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம் சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதியின் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக தனி தனியாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து ஸ்டிராங் ரூம்கள் உள்ள பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய ராணுவ படை போலீசார் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story