வனப்பகுதியில் 2 ஆண் சடலங்களை கைப்பற்றிய காவல்துறை !
காவல்துறை
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வனக் காப்பாளர் ராமஜெயம் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒகேனக்கல் பேவனூர் பீட், கோணமலை உச்சிகாட்டில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். தகவலின் பேரில், ஒகேனக்கல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் ஒகேனக்கல் ஊட்டமலை பீட் வனக்காபாளர் ரவிக்குமார், ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது ஒட்டப்பட்டி காப்புகாட்டில் சின்ன குழி பள்ளம் என்ற இடத்தில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கு போட்டு இறந்து கிடந்தார்.
விரைந்து வந்த காவல்துறையினர், அவரது சடலத்தை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவம் னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 சம்பவம் குறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார்.? எந்த ஊரை சேர்ந்தவர்கள்.? தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாரேனும் கொலை செய்துள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.