மூன்று பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு!

மூன்று பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு!

காவல் நிலையம்

திருமயம் அருகே நடந்த பொங்கல் ஆலோசனை கூட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீரத்தாக்குடி வாட்டர் டேங்க் அருகே அதே கிராமத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த அழகப்பன் 62 என்பவரை அழைக்கவில்லை. இதனால் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அழகப்பன் அவருடைய மகன் பிரேம்குமார்,மகள் கார்த்திகா ஆகிய மூவரும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியவர்களிடம் ஏன் தங்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என கேள்வி கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் அழகப்பன், பிரேம்குமார், கார்த்திகா மூன்று பெயர்களையும் அதே கிராமத்தை சேர்ந்த ராமு, பாண்டி, வீரமணி, ராசு, அழகு, சுப்பு ஆகியோர் வாய் தகராறில் ஈடுபட்டும், மரக்கட்டையால் தாக்கியும், அருவாளால் வெட்டி உள்ளன. இதில் அழகப்பன் லேசான காயம் அடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் பிரேம்குமார் கார்த்திகா லேசான காயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story