செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் !
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் செயின் பறிப்பு ஈடுபட்ட நபர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அனுமான் நகர் பகுதியைச் சார்ந்தவர் சங்கரேஸ்வரி வயது 45 இவருடைய கணவர் நவமணி தங்கேஸ்வரி இரவு 7 மணி அளவில் தனது வீட்டில் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த பொழுது வீட்டிற்குள் வந்த 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் சங்கரேஸ்வரி செயினை பிடித்துக் கொண்டதால் பாதி செயினை மட்டும் பறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவம் குறித்து சங்கரேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story