காவலர்கள் கலவரத்தை நிறுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி
ராமநாதபுரம் கலவரத்தில் எவ்வாறு கண்ணீர் புகை குண்டுகளை கையாள்வது என எஸ்பி சந்தீஷ் செய்து காண்பித்து விளக்கம் அளித்தார். நீங்கள் பார்ப்பது கலவரத்தின் போது காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீசுவது போல் தெரிகிறதா.ஆனால் "மாப் ஆப்ரேஷன் எனும் காவலர்களின் ஒத்திகை நிகழ்ச்சி இது.
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் கலவரத்தின் போது நடக்கும் பிரச்சனைகளை எப்படி கையாளுவது, அப்போது எந்த நேரத்தில் எந்தெந்த முறையில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட வேண்டும் எனவும் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வஜ்ரா வாகனத்தில் இருந்து இரு புறங்களிலும் கண்ணீர் புகை குண்டுகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் செய்து காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் கலவர நிகழும் இடத்தில் எவ்வாறு பயன்படுத்துவது ரப்பர் குண்டுகள் எவ்வாறு பயன்படுத்துவது என்றும் காவலர்கள் செய்து காண்பித்தனர் . அதனைத் தொடர்ந்து அவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தும் துப்பாக்கியை கொண்டு அவர் சுட்டு காண்பித்து காவலர்களிடம் விளக்கம் அளித்தார். அதனோடு கையெறி குண்டு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் செய்து காண்பித்து காவலர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது ஆயுதப்படை ஆய்வாளர் தங்கமணி, சார்பு ஆய்வாளர் சுரேஷ் கண்ணா, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.