பெரம்பலூரில் மனநலம் பாதித்தவரை மீட்ட காவல்துறையினர்
மீட்கப்பட்ட மனநலம் பாத்தித்தவர்
பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த செல்வேந்திரன் வயது. 37 என்ற நபரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து கடந்த 12.12.2023 அன்று சாலையில் சுற்றி திரிந்த செல்வேந்திரனை மீட்டு பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதாவிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் செல்வேந்திரனுக்கு, மனநல மருத்துவர் அசோக் மூலம் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவரம்பூர் இலந்தைப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வேந்திரன் தந்தையான ராஜேந்திரன் இடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து மற்றும் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா ஆகியோர்களால் நல்லமுறையில் ஒப்படைத்தனர்.
இச்செய்தியறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மனநல மருத்துவர் அசோக் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.