மரணமடைந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு போலீசார் ரூ 8. 27 லட்சம் நிதி 

மரணமடைந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு போலீசார் ரூ 8. 27 லட்சம் நிதி 

பைல் படம் 

உடல் நல குறைவால் உயிரிழந்த வடசேரி காவல் நிலைய எஸ் எஸ் ஐ குடும்பத்தினருக்கு போலீசார் காக்கும் கரங்கள் சார்பில் ரூ 8. 27 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

கன்னியாகுமரியை அடுத்த விஜய நாராயணபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (57) இவர் நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் எஸ் எஸ் ஐ ஆக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயச்சந்திரன் கடந்த இரு வாரங்களுக்கு முன் மரணமடைந்தார். ஜெயச்சந்திரனுக்கு இந்திராணி என்ற மனைவியும் பால சுனில் ( 25, பால இபேஸ் (23) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

மரணமடைந்த போலீஸ் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீசார் காக்கும் கரங்கள் நண்பர்கள் மூலமாக 6 லட்சத்து 82 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை மாநகரை சேர்ந்த நண்பர்கள் தனிப்பட்ட முறையில் 1லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பங்களிப்பாக வழங்கினர். இவ்வாறு பெறப்பட்ட தொகை 8 லட்சத்து 27 ஆயிரத்து 600 ரூபாயை மறைந்த எஸ் ஐ ஜெயச்சந்திரன் குடும்பத்தினரிடம் போலீசார் வழங்கினர்.




Tags

Next Story