டாஸ்மார்க் ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு ஆலோசனை
ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அடுத்த சனிக்கவாடி கிராமத்தில்டாஸ்மார்க் கடை, வந்தவாசி அருகே டாஸ்மார்க் கடையிலும் கடையை துளையிட்டு டாஸ்மார்க் ஊழியரைதாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது போன்ற தவறுகள் சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு உட்பட்ட தேவிகாபுரம் நெடுங்குணம் உலகம்பட்டு ஆகிய பகுதிகளில் நடைபெறாமல் இருக்க இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இன்ஸ்பெக்டர் தமிழரசி பேசுகையில் அரசு டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் அரசின் விதிமுறைப்படி தான் இயங்க வேண்டும் ஒரு கடைக்கு இரண்டு விற்பனையாளர்கள், ஒரு மேற்பார்வையாளர் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் தினமும் பணிக்கு வராமல் சுழற்சி முறையில் பணி புரிகின்றனர். அரசால் நியமிக்கப்பட்ட அனைவரும் கடைக்கு பணிக்கு வராமல் சில கடைகளில் ஒருவர் மட்டுமே பணிபுரிந்து வருவது தவறான செயலாகும். இது அரசை ஏமாற்றுவது மட்டுமல்ல உங்களை நீங்கள் ஏமாற்றுவதற்கு சமம். எதிர்பாராத சூழலில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தால் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து கடைகளின் வெளிப்புறமும் உள்புறமும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும் பலமுறை அறிவுறுத்தியும் இதை நிர்வாகம் கேட்பதில்லை .இது போன்ற தவறுகளால் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. டாஸ்மார்க் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கடைகளை மூட வேண்டும், பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் தேவையில்லாமல் நேரம் கடத்தக் கூடாது உங்கள் அதிகாரிகளின் உத்தரவுப்படி நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு போலீசார் எந்த நேரத்திலும் உதவி செய்ய தயாராக இருக்கின்றனர் .இருட்டான பகுதிகளில் உள்ள கடைகளில் கண்டிப்பாக ஒருவர் மட்டும் இருக்கக் கூடாது சூப்பர்வைசரும் பணியில் இருக்க வேண்டும் நீங்கள் செய்யும் தவறால் அரசுக்கு இழப்பு,உங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போவது போன்ற நிலை ஏற்படும் எனவே டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.ஆலோசனைக் கூட்டத்தில் சேத்துப்பட்டு நெடுங்குணம், உலகம்பட்டு ,அப்பேடு, தேவிகாபுரம், உள்பட அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.