தப்பி ஓடிய டிரைவரை தேடும் போலீசார்
காவல்துறை விசாரணை
அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் ஏற்றி வந்த டிரைவர் தப்பி ஓட்டம்.
நெல்லை மாநகர மானூர் போலீஸார் நேற்று நரியூத்து சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிராக்டரின் ஓட்டுநர் தப்பியோடி உள்ளார். அந்த டிராக்டரில் அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் டிராக்டரை காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Next Story