கிராவல் கடத்தியவருக்கு போலீஸ் வலை

கிராவல் கடத்தியவருக்கு போலீஸ் வலை

கிராவல் கடத்தியவருக்கு போலீஸ் வலை

கூத்தக்குடியில் கிராவல் மண் கடத்தி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் கூத்தக்குடி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த, டிராக்டர் டிப்பரை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார். தொடர்ந்து, டிப்பரை சோதனை செய்த போது, அனுமதியின்றி 1 யூனிட் கிராவல் மண் கடத்தி சென்றது தெரிந்தது. இதனையடுத்து டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கூத்தக்குடியை சேர்ந்த சுந்தரம் மகன் ரமேஷ் என்பவர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story