3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்... தட்டி தூக்கிய போலீஸ்

3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்... தட்டி தூக்கிய போலீஸ்

ரேஷன் அரிசி கடத்திய இருவர்

பளுகல் அருகே போலீசார் வாகன சோதனையில் கேரளாவிற்கு வேனில் கடத்த முயன்ற 3500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணெண்ணை கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனை போலீசார் அவ்வப்போது தடுத்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை பளுகல் பகுதியில் போலீசார் வாகன 'சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அந்த அரிசி கேரளாவிற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த தில்லை மற்றும் சார்லஸ் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story