விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர். 
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சக்தி நகரில், காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி, தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் ரவிகுமாா் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிலா் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினராம். அவா்களில் போலீசாரிடம் சிக்கிய இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவா் தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சோ்ந்த விஜயன் மகன் பேச்சிமுத்து (19) என்பதும், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமாா் 9 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், 2 எடை போடும் இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பி ஓடிய சிலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story