ரூ.2,88,700- மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.2,88,700- மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள்

புன்னம் சத்திரத்தில் ரூ.2,88,700- மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. பலமுறை விற்பனை செய்த கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் மீண்டும் இந்த பொருட்கள் சர்வ சாதாரணமாக பொதுமக்களின் கைகளில் கிடைப்பதை அறிந்த காவல்துறையினர், இதற்காக தனியாக கவனம் செலுத்தி மொத்த விற்பனையாளரை தேடி வந்தனர்.

இதனிடையே ஜூன் 19ஆம் தேதி காலை 11 மணி அளவில், புன்னன்சத்திரம் அரசு பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்த பகுதியில், காவல் ஆய்வாளர் ஜெகநாத் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது,4- டூவீலர்களில் சாக்குப் பைகளில் கொண்டு வந்த பொருட்களை ஆய்வு செய்வதற்காக தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஹான்ஸ் 140 கிலோ, கூல் லிப் 76 கிலோ, விமல் பாக்கு 47 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்களின் மதிப்பு ரூபாய்.சுமார் 2 லட்சத்து 88 ஆயிரம் என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம்,வட கயத்தாறு பகுதியை சேர்ந்த முத்து மற்றும் இளங்கோ ஆகியோரை கைது செய்து, இந்த பொருட்களை கொண்டு வந்த 4- டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story