8 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள்
திண்டுக்கல் அருகே புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் அருகே புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கருப்பையா மற்றும் போலீசார் திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அதில் பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த காந்திகிராமம் செட்டியபட்டியைச் சேர்ந்த ஜான் ஜஸ்டின் வில்லியம் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 8 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story