போலீஸ் எஸ்.பி., ஆய்வு



தாரமங்கலம், தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார்.
தாரமங்கலம், தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வருடம் ஒரு முறை அல்லது இரண்டு முறை அந்த நேரத்தில் பதவி வகித்து வரும் எஸ்பியால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த ஆய்வில் காவல்துறையினர் பணி சுமை மற்றும் காவல் நிலையங்களில் கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். இதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் மற்றும் தொளசம்பட்டி காவல் நிலையங்களில் சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஆய்வு செய்தார். அப்பொழுது குற்ற பதிவேடு, நிலுவையில் உள்ள வழக்குகள், காவல்துறையினருக்கு பணிச்சுமை உள்ளதா, காவல் நிலையங்களில் உள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் உள்ளிட்ட உதவி ஆய்வாளர் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story



