பயிற்சி எஸ்.ஐ.,க்களுக்கு வகுப்பு

பயிற்சி எஸ்.ஐ.,க்களுக்கு வகுப்பு
காவல் நிலைய பணிகள்: பயிற்சி எஸ்.ஐ.,க்களுக்கு வகுப்பு...

தாம்பரம் அருகில், ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி அகாடமி உள்ளது. இங்கு, காவலர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும், 14 ஆண் உதவி ஆய்வாளர்கள், 13 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு, காவல் நிலைய நடவடிக்கை தொடர்பாக நேரடியாக தெரிந்து கொள்ள, கானத்துார் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். நேற்று, காவல் நிலைய நடவடிக்கை குறித்து, போலீசார் விளக்கினர். காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, காவல் நிலை பதிவேடுகள் ஒவ்வொன்றையும் காட்டி, பராமரிப்பது குறித்து விளக்கினார்.

மேலும், அன்றாட பணிகள், பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம், சி.எஸ்.ஆர்., மற்றும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முறை குறித்து, முந்தைய பதிவேடுகளை காட்டி விளக்கினார். மேலும், குற்றவாளிகளை மருத்துவ பரிசோதனை மற்றும் நீதிமன்றம் அழைத்து செல்வது, அப்போது கொண்டு செல்லும் ஆவணங்கள், நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து செல்வது தொடர்பான நடைமுறைகளை விளக்கினார். தொடர்ந்து, பயிற்சி உதவி ஆய்வாளர்கள், சில கேள்விகள் கேட்டனர். இதற்கும், ஆய்வாளர் விளக்கம் அளித்தார்.

Tags

Next Story