வானூர் அருகே வாகன ஓட்டிகளிடம் மாமூல் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

வானூர் அருகே வாகன ஓட்டிகளிடம் மாமூல் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

வானூர் அருகே வாகன ஓட்டிகளிடம் மாமூல் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.


வானூர் அருகே வாகன ஓட்டிகளிடம் மாமூல் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகில் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 4-ல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பூமிநாதன், போலீஸ்காரர் அப் துல்ரஷீத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் வந்துகொண்டிருந்த கனரக வாகனங்களை நிறுத்தி அதன் டிரைவர்களிடமிருந்து மாமூல் வாங்கியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமான வீடியோ, சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த வீடியோ வெளியானதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் பூமிநாதன், போலீஸ்காரர் அப்துல்ரஷீத் ஆகிய இருவரையும் அங்கிருந்து விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உத்தரவிட்டார். மேலும் லஞ்சப்பணம் வாங்கியது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் போலீஸ் சூப்பி ரண்டு தீபக் சிவாச் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் இந்த புகார் தொடர்பாக கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், போலீஸ்காரர் அப்துல்ரஷீத் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Tags

Next Story