காவல் பணியின்போது புத்தாண்டு கொண்டாடிய போலீசார்
காவல் பணியின்போது புத்தாண்டு கொண்டாடிய போலீசார்
மயிலாடுதுறையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி பரவலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பை ஒட்டி பொதுமக்கள் இளைஞர்கள் கொண்டாடும் பொழுது விபத்துகளும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் ஆங்காங்கே ரோந்து பணி ஈடுபட்டு வந்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா 11 மணி இரவு 11 மணியிலிருந்து 12 மணி வரை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ் குமார் இரவு 12 மணிக்கு புனித சவேரியார் ஆலய வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போது அங்கிருந்த சக காவலர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்.
Next Story