நாகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

நாகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

மாவட்ட ஆட்சியர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற 03.03.2024 அன்று காலை 07.00 மணி முதல் 05.00 மணி வரை அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கிடும் முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற 03.03.2024 அன்று காலை 07.00 மணி முதல் 05.00 மணி வரை அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கிடும் முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தகவல் இது குறித்து கூறுகையில் இது வரை போலியோ சொட்டு மருந்து முகாமினை சிறப்பாக செயல்படுத்திய காரணத்தினால் நமது மாநிலம் இருபதாவது வருடமாக போலியோ இல்லா மாநிலமாக திகழ்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், அனைத்து வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 03.03.2024 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் கிராம புறங்களில் 49,772 குழந்தைகளும் நகர்புறங்களில் 11,846 குழந்தைகளும் ஆக மொத்தம் 61,618 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இம்முகாமினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோவை அறவே ஒழிக்க ஒத்துழைப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story