போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்
X

போலியோ சொட்டு மருந்து முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், காமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற போலியோ மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக காமராஜபுரம் அங்கன்வாடியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மெர்சி ரம்யா அவர்கள் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை. முத்துராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் திருமதி திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் திரு லியாகத்தலி, நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story