சேலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ சொட்டு மருந்து முகாம்
சேலம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் ஆகியோர் குமாரசாமிப்பட்டி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தனர். இம்முகாம்களை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
நாடுமுழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுவதையொட்டி, சேலம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2,92.210 குழந்தைகளுக்கு கிராமப்புறங்களில் 2,060 மையங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 296 மையங்கள் என மொத்தம் 2,356 மையங்களில் இன்று 03.03.2024 காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
இம்முகாமானது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியார் மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறுகிறது. என்று கூறினார். மேலும் அனைத்து பொது மக்களும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.