போலியோ சொட்டு மருந்து முகாம் - ஆட்சியர் துவக்கி வைப்பு
போலியோ சொட்டு மருந்து முகாம்
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருத்து தினத்தினை முள்ளிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட 1412 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 5391 பணியாளர்களை கொண்டு 0-5 வயதுடைய குழந்தைகள் 1.76 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறுகிறது.
எனவே போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அணுகி இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்தை வழங்கி தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமாக வளர்த்திட வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.