திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

சொட்டு மருந்து முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து விட்ட கலெக்டர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில்போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விட்டனர் மேலும் இதில் திருப்பத்தூர் நகர் பகுதிகளில் இருந்து தாய்மார்கள் கலந்து கொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விட்டு சென்றனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி,திமுக திருப்பத்துர் நகர செயலாளர் ராஜேந்திரன்,திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்
