மத்திய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

மத்திய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்

திருச்சி மத்தியபேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

குழந்தைகளை தாக்கும் கொடிய நோயான போலியோ நோயை முற்றிலும் அழிக்க, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாளை 3ஆம் தேதி இன்று தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் தொடங்கி, மாநகரங்கள் வரை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து விதமான பொது இடங்களிலும், பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நாள் முழுவதும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பார்வையிட்டு துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 267 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து இன்று புகட்டப்படுகிறது. அரசால் நடைபெறும் முதல் தவணை முகாமில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட சுமாா் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.

இதற்காக 267 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி நகா்நல மையங்கள், சத்துணவுக் கூடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்களில் இந்த மையங்கள் செயல்படும். இதற்கென 1036 போ் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இது தவிர ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினா், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா் மற்றும் தொண்டுள்ளம் படைத்தவா்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags

Next Story