கும்பகோணம் : போலியோ சொட்டு மருந்து முகாம்

கும்பகோணம் : போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்

கும்பகோணத்தில் மேற்கு ஒன்றிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

குழந்தைகளை தாக்கும் கொடிய நோயான போலியோ நோயை முற்றிலும் அழிக்க, மாநில அரசுகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் தொடங்கி, மாநகரங்கள் வரை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து விதமான பொது இடங்களிலும், பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நாள் முழுவதும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

கும்பகோணம் மேற்கு ஒன்றியம் ஆரியப்படைவீடு ஊராட்சி துணை சுகாதார நிலையத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும் கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான பம்பப்படையூர் சு.க.முத்துசெல்வம் போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணம் செயலாளர்கள் செந்தில்குமார் ரவீந்தர் மற்றும் அரசு சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story