பெரம்பலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில்  போலியோ சொட்டு மருந்து முகாம்

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3ம் தேதி அன்று நடைபெறவுள்ளது

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3ம் தேதி அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் கற்பகம், தகவல். இந்தியாவில் இளம்பிள்ளை வாத நோயை, ஒழிக்கும் வகையில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து மார்ச் 3ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் இந்த முகாம் நடைபெறும். இந்த போலியோ சொட்டு மருந்து மையங்களில், சுகாதார பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 1,548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட 43,442 குழந்தைகள் பயன் பெறுவார்கள். பொதுமக்கள்அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மார்ச் - 3ம் தேதி அன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொண்டு, இளம்பிள்ளை வாத நோய் தாக்கத்திலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story