விழுப்புரத்தில் போலியோ சொட்டு மருந்து
போலியோ சொட்டு மருந்து முகாம்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் முன்னிலையில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்த்துத்துறை சார்பில், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் மொத்தம் 1669 முகாம்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 1,57,393 குழந்தைகளுக்கு இச்சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இப்பணிகளில் பொது சுகாதாரத் துறை பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 12097 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர்மன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ், நகர் நல அலுவலர் ஸ்ரீபிரியா, வட்டார மருத்துவ அலுவலர், நகர இளைஞரண அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.