கன்னியாகுமரி : போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியொ சொட்டு மருந்து முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று மாவட்டம் முழுவதும் நடந்தது. கன்னியாகுமாரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் போலியோ முகாமை தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில்,
குமரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 732 குழந்தைகள் பயன்பாட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இந்த முகாமில் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடக்கி வைத்தார்.
மேலும் குழித்துறை நகராட்சியில் குதித்துறை நகர் மன்ற தலைவர் பொன் ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். இன்று மாவட்டம் முழுவதும் இந்த முகாம் நடைபெற்றது. குமரி மலையோர பகுதிகளில் நடமாடும் குழுக்கள் மூலமும், தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்கினார்கள்.
