திருச்சியில் 1. 94 லட்சம் சிறாருக்கு போலியோ சொட்டு மருந்து

திருச்சியில் 1. 94 லட்சம் சிறாருக்கு போலியோ சொட்டு மருந்து


திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது


திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது

அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், அனைத்து ஊரக மற்றும் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் போலியோ நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அண்டை நாடுகளில் போலியோ நோயின் தாக்கம் இருப்பதால் தொடா்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோா்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவா்களுக்கு 63 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து திருச்சியில் அனைத்து ரயில்களிலும் மாா்ச் 3 முதல் 5 ஆம் தேதி வரை பயணிக்கும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் கிராமப்புறங்களில் 1,26,969, நகா்ப்புறங்களில் 66,994, இடம் விட்டு இடம் பெயா்ந்துள்ள 91 மற்றும் அகதிகள் முகாமில் உள்ள 81ஆக மொத்தம்; 1,93,963 குழந்தைகளுக்கு 1,695 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. எதிா்பாா்த்ததைவிட 100 சதவிகிதத்துக்கும் மேலாக சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூா், சமயபுரம், கம்பரசம்பேட்டை ஆகிய ஊா்களில் நடைபெற்ற திருவிழாக்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன என்றாா். நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அலுவலா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

Tags

Read MoreRead Less
Next Story