போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் முடிவு
பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் பகுதியில், மின்விளக்குகள் எரியாமல் உள்ளதால், போராட்டத்தை மேற்கொள்ள அரசியல் கட்சியினர் முடிவு செய்துள்ளனர் .
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காவிரி ஆர் எஸ் பகுதியில் ரயில்வே ஜங்ஷன் பகுதி அமைந்துள்ளது.. இந்நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை என கூறப்படுகிறது . இதனால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் பெண்கள் முதியவர்கள் அச்சத்துக்கு உள்ளாகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த மின் விளக்கை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.. இது குறித்து தொடர்ந்து பலமுறை ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரைவில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்..
Next Story