அம்மாபேட்டையில் கட்சி உறுப்பினர் அரசியல் பயிற்சி வகுப்பு 

அம்மாபேட்டையில் கட்சி உறுப்பினர் அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோவிலூரில் கட்சி உறுப்பினர் அரசியல் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் தலைமையில் நடைபெற்ற முதல் அமர்வில், 'பொருள் முதல் வாதம்' என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர் பி. மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில், 'கட்சி திட்டம்' என்ற தலைப்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் கே.முனியாண்டி தலைமையில் நடைபெற்ற மூன்றாவது அமர்வில், 'கட்சி அமைப்பு சட்டம்' என்ற தலைப்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன் ஆகியோர் பேசினர்.

இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.ரவி, கே.கோபாலன், ஆர்.துரைராஜ், பி.ராஜேந்திரன், யூ.சரவணன், கே.கே.சேகர், என். வெற்றிச்செல்வி மற்றும் கிளைச் செயலாளர்கள், முன்னணி தோழர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story