கருத்துக்கணிப்பு வெளியீடு!
இந்தியன் பொலிட்டிக்கல் டெமோகிரடிக் ஸ்டாடிஸ்டிக்ஸ் (IPDS )நிறுவனம் சார்பில் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது.
இந்தியன் பொலிட்டிக்கல் டெமோகிரடிக் ஸ்டாடிஸ்டிக்ஸ் (IPDS )நிறுவனம் சார்பில் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என இந்தியன் பொலிட்டிக்கல் டெமோகிரடிக் ஸ்டாடிஸ்டிக்ஸ் (IPDS ) என்ற நிறுவனம் சார்பில் கருத்துக்கணிப்பு வெளியிட இருந்தனர்.தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பத்திரிகையாளர் மன்ற வாயிலில் வைத்து IDBS அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் பிரபாகர் பத்திரிகையாளர் முன்னிலையில் கருத்துக்கணிப்பை வெளியிட்டார்.கோவை மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பை சார்ந்த 3281 பேரிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டதாகவும் இந்த கருத்து கணிப்பில் வெற்றி வாய்ப்பு பாஜகவிற்கு அதிகம் என தெரிவித்தார். பாஜகவிற்கு 38.9% திமுகவிற்கு 33.4%,அதிமுக விற்கு 18.5%,நாம் தமிழர் கட்சிக்கு 6.8%, மற்ற கட்சியினர் 2.5% வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி கருத்துக்கணிப்பு தகவலை வெளிட்டார்.
Next Story