பேராவூரணியில் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் குழு கூட்டம்
பேராவூரணியில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் கா.அண்ணாதுரை எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினரும் பேராவூரணி எம்எல்ஏவுமான நா.அசோக்குமார், தொகுதி பார்வையாளர் நாகை மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அவைத்த தலைவர் சுப.சேகர், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பி. ரமேஷ், மைக்கேலம்மா ஞானப்பிரகாசம், ஒன்றிய செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், கோ.இளங்கோவன், வை.ரவிச்சந்திரன், பா.ராமநாதன், பேரூர் கழக செயலாளர்கள் என்.எஸ்.சேகர், மாரிமுத்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அ.அப்துல் மஜீத், ரூஸ்வெல்ட், தனபால் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 'வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிராச்சாரத்தை அனைத்து பகுதிகளும் எடுத்துச் சென்று, திமுக அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டது.
Next Story