கொடியம்பாளையம் தீவில் வாக்கு வேட்டை

கொடியம்பாளையம் தீவில் வாக்கு வேட்டை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு தனது முதல் தேர்தல் பரப்புரையை கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தொடங்கினார்.


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு தனது முதல் தேர்தல் பரப்புரையை கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தொடங்கினார்.

சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மீனவ கிராம மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார் தன்னை வெற்றி பெற செய்தால் கொடியம்பாளையம் தீவு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.அதன் பின்னர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது முதியவர்கள் காலில் விழுந்து வேட்பாளர் பாபு ஆசீர்வாதம் பெற்று வாக்கு சேகரித்தார் அப்போது அங்கு குடியிருந்த இளைஞர்கள் கொடியம்பாளையம் கிராமத்தில் கடல் நீர் உட்புகாமல் தடுக்க அப்பகுதியில் கதவனை அமைத்து தர வேண்டும் எனவும் மீன் வலை பின்னும் கூடம் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.வெற்றி பெற்று இந்த கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என இளைஞர்களிடம் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் கடைவீதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவை தலைவர் பி.வி .பாரதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மா.சத்தி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரமோகன், தோழமைக் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ராமலிங்கம், துனை செயலாளர் குமார். பொருளாளர் லோகு. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவுபர். துனை செயலாளர் மெகராஜ் ஒன்றிய அவைத்தலைவர் சுரேஷ், பொருளாளர் செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story