பாபநாசத்தில் வாக்குப்பதிவு பாதுகாப்பு அறை: மாவட்ட வருவாய் அலுவலர் பார்வை
வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையை ஆய்வு செய்த அலுவலர்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வி.வி.பாட் எந்திரங்கள் ஆகியவை வைக்கும் பாதுகாப்பு அறை பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ளது .
இந்த பாதுகாப்பு அறையினை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பாதுகாப்புக்குரிய அனைத்து வசதிகளையும் அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் கண்காணிப்பு கேமரா உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.