ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு

கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.


கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.

கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க் முன்னிலையில் கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணிகள் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் 1, 2, 3, 4 ஆகியோர், கணினி மூலம் இரண்டாம் கட்ட சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story