குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பு; சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பு; சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்
 மதுராந்தகத்தில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் பள்ளிக் குழந்தைகள் ஈடுபட்டுள்ளதால், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகத்தில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் பள்ளிக் குழந்தைகள் ஈடுபட்டுள்ளதால், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடுகிறது.பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் மதுராந்தகம் நகரில் பாமகவினர் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை பஜார் பகுதி முழுவதும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பிரசாத்தில் ஈடுபடுத்தினர்.

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணைய விதி உள்ளது.. அந்த விதியை மீறி தேர்தலில் சிறுவர்களை வாக்கு சேகரிக்க ஈடு படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story