மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம்  முற்றுகை

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட உரிமையாளர்கள்

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் முற்றுகை செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன்.இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். பு

காரின் பேரில் தொழிற்சாலைக்கு செல்லும் அதிகாரிகள் ஆய்வு செய்து மாதிரிகளை ஆய்வகத்திற.கு அனுப்புகின்றனர்.ஆய்வில் முறைகேடாக செயல்படுவது தெரிந்தால் மின் மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டிக்கின்றனர்.


ஆனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலைகள் மீது காலக்கெடு , நோட்டீஸ் எதுவும் வழங்காமல் நடவடிக்கை எடுப்பதாக கூறி சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Tags

Next Story